Friday, November 23, 2012

ஆங்கிலமும் பெண்களும்

எங்கள் வகுப்பில்  நாங்கள் எல்லோரும் மிகவும் பயப்படும் ஒரு டீச்சர்  ஒரு நாள் 'நான் மஜுரா போய் வந்தேன்' என்றார். ஒரு மாதம் கழித்துத் தான் தெரிந்தது அவர் மதுரையைப் பற்றித்தான் குறிப்பிட்டார் என்பது.

மதுரையை ஸ்டைலாகச்  சொல்வதாக நினைத்து அப்படிக்கூறியிருக்கிறார் என்பது பின்னர் புரிந்தது. ஸ்டைல் என்றால் ஆங்கில உச்சரிப்பு என்பது ஓர் தவிர்க்க முடியாத எண்ண அலை. 

அப்போதும் இப்போதும் ஊர்ப்பக்கங்களில் எல்லாம் ஆங்கிலம் என்றால் ஒரு மரியாதை தான். 

ஆங்கிலம் கலந்து பேசுவதை ஒரு கலையாக, ஒரு சக்தியாக, ஒரு மரியாதைச் சின்னமாகப்   பெண்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். 

அழகு என்ற சக்தியை மட்டுமே ஆயுதமாகக் கொண்ட பெண்டிர்  ஆங்கிலம் என்ற சக்தியை உபயோகிக்க ஆரம்பித்தனர்.

ஒரு புது விதியை ஆங்கிலம் உருவாக்கியது. ஆங்கிலம் அடுப்படியில் இருந்த பெண்ணுக்கு உலகைக் காட்டியது. அவள்  நிமிரக் காரணமானது. 

ஆங்கிலம் பேசும் பெண்ணிற்கு திமிர் அதிகம் என்னும் எண்ணம்  அவளைப்பார்த்து ஏற்படும் பயத்தின் விளைவே.   

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.