Sunday, July 7, 2019

KUYIL PAATTU

குயில் பாட்டு


இனிமையின் கடவுள்  என்றிந்தேன் 

இசையின் தாயென  என்றிந்தேன் 

இதய ஸ்வரம் தான் என நினைத்தேன் 

இருப்பிடம்  ஏதோ  தேடி  அலைந்தேன்.


மாமர உச்சியினின்று வழுக்கி வந்தாய்  

மலையடிவாரத்தில் ஒளிந்து கொண்டாய் 

இலைமறை காயாய்   என்றும் இருந்தாய் 

இருக்குமிடம்  மறைத்து கதைத்து வந்தாய்.


அம்மா, என் உயிரே,  எந்தன்  நெறியே 

அந்தக் குரலை எங்கு பெற்றாய், சொல்வாய் 

என் கனத்த  மனத்தை உருக்கிப் பிசைந்து  

என் சிந்தனையைக்  கிளறி தூபம் இட்டாய்.


கனவாய் வந்து கதாபாத்திரம் ஆகி 

கற்பனைக்கு மெருகு ஊட்டிய தாயே 

எதையோ நினைத்து பாடுகிறாய் என்பேன் 

என் ஏக்கம் உன் குரலில் கேட்கிறேன்.


வாயத் திறந்து மொழி பேசுவாய் - என் 

வருத்தம் தீர ஒரு வார்த்தை தாராய். 


சு. ஸ்ரீ தேவி 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.