Thursday, October 15, 2015

தெரியும் என நினைத்தேன்

தெரியும் என நினைத்தேன்


எனக்கே என்னைத் தெரியுமென  

தனக்கேயுரிய பாணியில்

தன்னம்பிக்கையோடு நினைத்தேன்


தண்ணீர் போல சலசலத்தது

தானாய்த் தோன்றிய நான்

குமிழ் குமிழாய் ஒளிர்ந்தது

சூரியனை வாங்கியது


டக்கென்று மறைந்தது

என்னைத்தொலைத்தேன்

சுழியில் அடங்கினேன்

இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்


சு . ஸ்ரீ  தே வி






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.