Wednesday, January 15, 2020

 குடியரசு தினம் 


வந்தது வந்தது நல்லது வந்தது 

வந்தது நல்லது தானே 

சுதந்திரம் வந்தது தானே 

இதை நிந்தனை செய்யாது 

நித்தமும் நாடிடு 

சந்தத் தமிழ் தனில்  தேனே 


ஆண்ட அவர்  சென்றார் 

அடுத்தது யோசிக்க வேண்டும் 


மன்னர்கள் இல்லை 

மக்கள் தான் மன்னர் 

என்று நாம் மாறி விட்டோம் 

எம்மை நாம் மாற்ற வேண்டும் 


எப்படி நம்மை  நாம் ஆள்வது 

என்று நாம் யோசிக்க வேண்டும் 

சட்டங்கள் வேண்டும் 

திட்டங்கள்  வேண்டும் 


சகலத்திற்கும்  ஆணைகள் வேண்டும் 

சராசரி பார்க்க வேண்டும் 

சாலை விதிகள் வேண்டும் 

சமமாய் நடத்த வேண்டும் 


கல்விக்கும் கல்யாணத்திற்கும் 

கடமைக்கும்  கலைக்கும் 

கட்டாயம் கருவிகள் வேண்டும் 

கண்காணிப்பும் வேண்டும் 


இத்தனையும் எழுதப்பட வேண்டும் 

எழுத்து ஆணையாய்ப் பிறக்க வேண்டும் 

அறிவு  ஆணையை  எழுத வேண்டும் 

அதை அறிஞர் ஆதரிக்க வேண்டும் 


அனைவரின் எண்ணமே ஆட்சியாகும் 

அதுவே ஜனநாயகம் ஆகும் 

அப்படி எழுதிட ஆகிடும் வருடம் 

ஆனதே வருடங்கள் மூன்று .


நாற்பத்தி ஏழில் வந்த சுதந்திரம் 

ஐம்பதில் அமலுக்கு வந்தது 

அதுவே  நம்  நாட்டு குடியரசு 

நம் வாழ்வின் திருவின்  அரசு.   






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.