Saturday, January 25, 2020

மரம்



நான் பிறந்த கதை சிறிது 


சின்னஞ் சிறிய கொட்டை 

என் வீரியக் கதிர் அதில் 

அது வெடித்துச் சிதறியதால் 

என் உயிர் ஓர் உடல் பெற்றது 

வான் தந்த சில சொட்டுகளில் 

வளர்ந்தேன்  வளர்பிறையாய் 

பச்சையாய்ப்   பரவினேன் 

பாரை வளைக்க யோசித்தேன் 

பக்கத்தில் இருந்த பகாசுரன் 

பழைய கட்டிடம் பார்த்தேன் 

சும்மாய் சுமையை இருந்தது 

சுயமாய் யோசித்து ஆராய்ந்தேன் 

சுலபமாய் வீழ்த்தலாம் இதை 

சுளுவாய் என் வேர்களை விட்டேன் 

முறித்தன அவை எலும்புகளை 

முதுகெலும்பை நொடித்தன 

அத்தனை கற்களும் என் கீழ் 

அறிவியலை அடக்கினேன் 

கான்க்ரீட் தகர்ந்தது  கனவாய் 

கணக்குகள் பொய்த்தன  மெதுவாய் 

எங்கும் என் பச்சை இலைகள் 

யாதுமாகி நின்றன  ஆங்கே
 

யாரோ  பேசினார் என் காதுகேட்க
 

'இந்த ஆலமரம் மோசம்

இந்தக் கட்டிடத்தை உடைத்து 

இடத்தையே காலி பண்ணி 

நாசம் செய்துவிட்டது'  





























No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.