வானம்
அவன் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். பார்க்கப் பார்க்க அவன் சிறிதாய்ப் போனான். பிரபஞ்சம் தன் கடமையைச் செய்து கொண்டிருந்தது. ராசி என்று நாம் பேர் வைத்திருக்கும் இயற்கை நம் குழந்தைத்தனத்தை ரசித்துக்கொண்டிருந்தது. நம்பிக்கை இருந்தால் தானே வாழ முடியும். வெங்காயத்தோல் போன்ற வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாதவன் தாக்குப் பிடிக்க முடியாது என்பது நட்சத்திரங்களுக்குத் தெரிந்து தான் இருந்தது.
தினம் தினம் பார்த்தாலும் வானம் சலிக்கவில்லை அவனுக்கு. ஏதோ உறவினர்களைப் பார்ப்பது போல் தான் இருந்தது. என் மூச்சு என் உடலை விட்டு எங்கு சென்று பூக்கும் என்று யோசித்தான். தினமும் யோசித்தான்.
காற்று ஓங்கி அவன் முகத்தில் அடித்தது. இந்தக் காற்று இனி எங்கு சென்று பிறக்கும் என்று யோசித்தான். காற்றில் நாம் இருக்கிறோமா? காற்று நமக்குள் உள்ளதா? வானம் அவனைப் பார்த்துக் கொண்டேயிருந்தது. நீயும் நானும் ஒன்றே என்றது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.